Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கேபிள் டிவி VS டிடிஹச் எது சிறந்தது CABLE VS DTH HOW BEST

பாக்ஸ் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முறையீடு செய்து அவர்கள் சொல்லக்கூடிய இடத்தில் அதை ஒப்படைத்து புது செட்டாப் பாக்ஸ் பெற்றுக் கொள்ளலாம்
இந்த விஷயத்திலும் DTH சிறந்ததாக உள்ளது
பேக்கேஜ்களில் சிறந்தது

CABLE TV AND DTH பேக்கேஜ்

தமிழ்நாடு அரசு CABLE TV பேக்கேஜ் நிலவரங்களை பார்க்கலாம் அதாவது அரசாங்க நிறுவனமான TACTV நிறுவனம் உட்பட அனைத்து வகையான தனியார் CABLE TV நிறுவனங்களும் நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் என்னும் தொகையை வசூல் செய்யும்போது அதில் அரசாங்கத்திற்கு சொந்தமான TACTV நிறுவனம் மட்டும் வெறும் 155 ரூபாய்க்கு அனைத்துவித தமிழ் சேனல்களின் தருகின்றது ஆனால் மற்ற CABLE TV நிறுவனங்கள் இதுபோல் தருவதில்லை.இருப்பினும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி உட்பட தனியார் CABLE TV நிறுவனங்கள் வரைக்கும் உள்ளூர் தொலைக்காட்சிகள் வழங்கப்படும் ஆனால் இந்த உள்ளூர் தொலைக்காட்சிகள் DTH வழங்கப்படமாட்டாது

DTH சேவை பொருத்தவரைக்கும் அனைத்து வகையான PACKAGE குறைந்தபட்ச விலை அதாவது தமிழ் PACK மட்டும் குறைந்தபட்ச விலை 199 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது மாதத்திற்கு 199 ரூபாய் கட்டினால் அனைத்துவித தமிழ் சேனல்ஸ் களும் வந்துவிடும்

குறிப்பாக சன் டைரக்ட் 199 செலுத்தும்போது ஜீ தமிழ் சேனல் மட்டும் உங்களுக்கு வராது

ஏர்டெல் டிடிஎச் இல் 199 செலுத்தும் போது அதில் டிஸ்கவரி தமிழ் சேனல் மட்டும் உங்களுக்கு வராது

டிஷ் டிவி மற்றும் வீடியோகான் டிடிஎச் இல் 179 ரூபாய் செலுத்தும் போது அதில் அனைத்து வகையான தமிழ் சேனல்களும் வந்துவிடும்

டாட்டா ஸ்கையில் நீங்கள் rs.199 செலுத்தும்போது அதில் உங்களுக்கு RAJ GROUP, MEGA GROUP, JAYA GROUP இந்த சேனல்கள் எதுவும் உங்களுக்கு வராது இதை தவிர்த்து உங்களுக்கு இருக்கக்கூடிய SD சேனல் அனைத்தும் வந்துவிடும்

பேக்கேஜ் பொருத்தவரைக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மிக சிறந்ததாக காணப்படுகின்றது இருப்பினும் இடையில் கேபிள் அறுந்து விழுந்தால் அதற்கு சிக்னல் உங்கள் வீட்டிற்கு வராது

இந்த காரணத்தை தவிர  DTH சிறந்ததாக காணப்படுகின்றது

சேனல்கள்

சேனல்களை பொருத்தவரையில் தமிழ்நாடு அரசு CABLE TV உட்பட தனியார் கேபிள் டிவி நிறுவனங்களில் மிக அதிகமாகவே காணப்படுகின்றது ஒரு சேனல் ஆரம்பிக்கப்பட்டால் அதே CABLE TV முதலில் வெளியிடப்பட்டு அதன் பின்னர்தான் வீடுகளில் கொண்டுவரப்படும்.குறிப்பாக கேபிள் டிவி களில் உள்ளூர் தொலைக்காட்சிகள் காணப்படும் அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்றார்போல் சில தொலைக்காட்சிகள் வரும்

DTH பொருத்தவரையில் குறிப்பிட்ட அளவிலான சில சேனல்களில் காணப்படும் அனைத்து வகையான DTH களில் சேர்த்து தான் சொல்கின்றேன் கேபிள் டிவியில் 100 சேனல்கள் வருகின்றது என்றால் அதை டிடிஎச்சில் 70 அல்லது 60 சேனல் மட்டுமே வரும்

சேனல்களை பொருத்தவரையில் கேபிள் டிவி நிறுவனம் மட்டுமே அதிகளவிலான சேனல்களை தருகின்றது எனவே கேபிள் டிவி நிறுவனம் மட்டுமே சேனல் விஷயத்தில் நம்பகமாக உள்ளது சிறந்தது

ரெக்கார்டிங் சிறப்பம்சம்

CABLE TV மற்றும் DTH களில் வரக்கூடிய செட்டாப் பாக்ஸ்கள் அனைத்திற்கும் இலவச வீடியோ ரெக்கார்டிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.. குறிப்பாக ஒரு பாதுகாப்பு அம்சம் உள்ளது அதாவது நீங்கள் எந்த செட்டாப் பாக்ஸ் இல் ரெக்கார்டிங் செய்கிறார்களோ அதே செட்டாப் பாக்ஸ்  நீங்கள் திரும்பவும் பார்க்க முடியும் DTH மற்றும் CABLE TV இருக்கும் சேர்த்து

அனைத்து வகையான டிடிஎச்  ரெக்கார்டிங் அம்சம் இலவசமாக வழங்கப்படுகின்றது ஏர்டெல் டிடிஎச் தவிர

ஏர்டெல் டிடிஎச் இல் ரெக்கார்டிங் அம்சத்தை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் மாதத்திற்கு 33 ரூபாய் செலுத்த வேண்டும்

மற்ற தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் உட்பட அரசு கேபிள் டிவி நிறுவனங்கள் வரை இலவசமாக வீடியோ ரெகார்டிங் செய்துகொள்ளலாம்

NCF ( NETWORK CAPACITY FEES )

கேபிள் டிவியில் நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் ஆனது அரசாங்க CABLE TV தவிர மற்ற அனைத்து வகையான CABLE TV களிலும் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது அதாவது மாதத்திற்கு 155 ரூபாய் மட்டுமே அனைத்து வரிகள் உட்பட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி யில் சில தனியார் கேபிள் டிவி களில் 245 ரூபாய் தான் குறைந்தபட்ச விலை

DTH பொருத்தவரையில் NCF தனியாக கட்டவேண்டும் PACK PRICE தனியாக கட்டவேண்டும் GST தனியாக கட்ட வேண்டும் ஏதாவது சேனல்  விரும்பினால் அதற்கு தனியாக கட்ட வேண்டும்

இருப்பினும் அனைத்து வகையான டிடிஎச் நிறுவனங்களும் 199 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளனர் இதில் அனைத்து வகையான சேனல்களும் வரும் .199 PACK பற்றி ஏற்கனவே நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்

HD செட்டாப் பாக்ஸ் சிறந்தது

 தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் HD மற்றும் SD செட்டாப் பாக்ஸ்கள் வந்துவிட்டன இருப்பினும் அனைத்து வகையான பகுதிகளுக்கும் HD செட்டாப் பாக்ஸ் இன்னும் சென்று சேரவில்லை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மட்டும் தான் சொல்கின்றேன் மற்றபடி தனியார் கேபிள்டிவி நிறுவனங்கள்  செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தும்போது HD செட்டாப் பாக்ஸ் வரும்

DTH பொருத்தவரையில்  முதலில் இருந்தே HD செட் டாப் பாக்ஸ் கொண்டு வந்துள்ளனர் இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் கேபிள் டிவிக்கு முன்னரே DTH செட்டாப் பாக்ஸ்  கொண்டு வந்தது


செட்டாப் பாக்ஸில் சிறந்தது DTH வழங்கப்படும் செட்டாப் பாக்ஸ் தான்

முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் கேபிள் டிவி வாங்கும் போது இடையில் வயர் கட் ஆனால் சிக்னல் நின்றுவிடும் ஆனால் DTH அந்த வகையான பிரச்சனைகள் கிடையாது

Post a Comment

0 Comments